ஹைலெவல் வீதியை மூடி கார் பந்தயம்

புதுவருட தினங்களில் ஹைலெவல் வீதியை மறித்து கார் பந்தயம் நடத்திய குழுவினர் குறித்து பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த கார் பந்தயம் காரணமாக அந்த வீதியில் வாகனப் போக்குவரத்தும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளானதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அனுமதியின்றி இத்தகைய பந்தயத்தை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் பந்தயத்தில் பங்கேற்றவர்கள் குறித்து பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.