பரோலில் தப்பிய ஆயுள் தண்டனை கைதி: 20 வருடங்களுக்குப் பின் சொந்த ஊரில் பிடிபட்டார்!

1989ஆம் ஆண்டு மனைவியைக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் ராணுவ வீரர் அனில் குமார் திவாரி, 2005ஆம் ஆண்டு பரோலில் சென்ற பின் சிறைக்குத் திரும்பாமல் தலைமறைவானார்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர், சுமார் 20 ஆண்டுகள் கழித்து தனது சொந்த கிராமத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தலைமறைவு வாழ்க்கையில் கைப்பேசி பயன்படுத்தாமல், வேலை செய்யும் இடத்தையும் வசிப்பிடத்தையும் மாற்றி வந்ததுடன், இரண்டாவது திருமணம் செய்துகொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.