நாட்டில் புழங்கும் பணத்தில் ஒரு ட்ரில்லியன் வங்கி முறைக்கு வெளியே உள்ளது…

வருடத்திற்கு நாட்டில் புழங்கும் பணத்தில் அதிகளவான தொகை வங்கி முறைக்கு வருவதில்லை என்றும், அந்தப் பணத்தை பொருளாதாரத்திற்கு கொண்டுவர வேண்டுமென்றால் மக்கள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட வேண்டும் என்றும் ‘லங்கா பே’ நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சன்ன த சில்வா கூறுகிறார்.

இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான Payment Bulletin அறிக்கையில் உள்ள 2024 ஆம் ஆண்டில் நாட்டில் புழங்கிய அனைத்து நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு தொடர்பான தரவுகளை முன்வைத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“மத்திய வங்கி வெளியிட்ட இந்த அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் 1.33 ட்ரில்லியன் ரூபா மதிப்புள்ள நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான பணம் வங்கி முறைக்கு வரவில்லை. சாதாரண பொதுமக்கள் அல்லது சிறு மற்றும் நடுத்தர வணிகர்களிடம் உள்ள அந்தப் பணம் அவர்களின் பணப் பெட்டிகளில், மெத்தையின் கீழ் அல்லது பணப் பைகளில் உள்ளது. அதாவது இந்த பணம் வங்கி முறைக்கு வெளியே உள்ளது.

அவற்றுக்கு வட்டி கிடைப்பதில்லை. வங்கியில் மீண்டும் கடன் கொடுக்க முடிவதில்லை. சரியாகப் பார்த்தால் இந்த பணம் எந்தப் பயனும் இல்லாத பணம். அதனால்தான் நாங்கள் இந்த இலக்கு குழுவை இலக்காகக் கொண்டு டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களுக்குள் நுழைய வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.