அகண்ட பாரதத்தில் இலங்கை? அனுர குமார அரசாங்கத்தின் ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து தயான் ஜயதிலக.

அனைத்தையும் கேவலமாக காட்டிக் கொடுத்துவிட்டு.. இந்திய ராணுவமும் இலங்கைக்கு.. இலங்கை இந்தியாவின் அகண்ட பாரதத்தில் சேர்க்கப்பட்டு வரைபடமும் வரையப்பட்டுள்ளது..
ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான திசைகாட்டி அரசாங்கம் மோசமான முறையில் இலங்கையின் இறையாண்மையை இந்தியாவுக்கு வழங்கிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாவது, அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது எட்டப்பட்ட உடன்படிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
ஆனால் தெரியவரும் தகவல்கள் படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் இறையாண்மையை கடுமையாக கேள்விக்குள்ளாக்கும் வகையில் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்திய பிரதமரின் தலைமையில் செயல்படுத்தப்படும் அகண்ட பாரத் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி இந்திய கனரக ஆயுத தொழிற்சாலை கிடங்குகள் மற்றும் இராணுவ வீரர்கள் இங்கு நிறுவப்படவுள்ளதாகவும் அவர் இந்த பேட்டியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.