தானியக்க முறையில் மூடிய காரின் கதவு; மூச்சுத் திணறி இரு பிள்ளைகள் உயிரிழப்பு.

தெலங்கானாவில் தாய் மாமாவின் திருமணத்திற்குச் சென்ற இடத்தில் காருக்குள் விளையாடிய இரு சிறுமிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 வயதான தன்மையஸ்ரீயும் 4 வயதான அபிநயஸ்ரீயும் தங்கள் தாய்மாமாவின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகக் குடும்பத்துடன் சென்றனர்.

அப்போது ஹுயுண்டாய்-10 வகை காருக்குள் சிறுமிகள் விளையாடியபோது, தானியக்க முறையில் இயங்கும் அக்காரின் கதவுகள் தானாகப் பூட்டிக்கொண்டதாகக் கூறப்பட்டது.

நீண்ட நேரமாக குடும்பத்தினர் கவனிக்காத நிலையில், காருக்குள் மூச்சுத்திணறி அவர்கள் உயிரிழந்தனர்.

பிள்ளைகளைக் காணாமல் வேறு இடங்களில் பெற்றோர் தேடி அலைந்தனர். பின்னர், உறவினர் ஒருவர் காருக்குள் பிள்ளைகள் நினைவிழந்த நிலையில் இருப்பதைக் கண்டார்.

கார் கதவுகளின் கண்ணாடிகளை உடைத்து அச்சிறுமிகளை மீட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.