‘குட் பேட் அக்லி’ வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு.

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்தியது, பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட புகார்களை எதிர்கொண்டுள்ளார்.

ஷைன் டாம் சாக்கோ தம்மிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக மலையாள நடிகை வின்சி அலோசியஸ் புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஷைன் டாம் சாக்கோ அண்மையில் வெளியான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நடித்தவர். மேலும், பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கைது செய்யப்பட்ட ஒரு பெண் ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாஷி ஆகிய மலையாளத் திரையுலக நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து போதைப்பொருள் விநியோகித்து வந்ததாக விசாரணையின்போது குறிப்பிட்டிருந்தார்.

இ்ந்நிலையில், வின்சி அலோசியஸ் தெரிவித்துள்ள புகார் ஷைன் டாம் சாக்கோவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

வின்சி சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது, ஃபிலிம்ஃபேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.

இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில் ஷைன் டாம் சாக்கோ பெயரைக் குறிப்பிடாமல், நடிகர் என்று மட்டும் குறிப்பிட்டு ஒரு சம்பவத்தை அவர் விவரித்துள்ளார்.

“நான் ஒரு படத்தில் பணியாற்றியபோது அதில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார். ஒருமுறை நான் அணிந்திருந்த ஆடையில் சிறிய பிரச்சினை என்பதால் அதை சரி செய்வதற்காக தனி அறைக்குச் செல்ல முற்பட்டபோது, தானும் உடன் வருவதாகக் கூறினார்.

அது மட்டுமல்ல, இன்னொரு நாள் ஒரு பாடல் காட்சிக்கான ஒத்திகையின்போது திடீரென அவரது உதட்டில் இருந்து வெள்ளையான நிறம் கொண்ட பொருள் வெளிப்பட்டது. அப்போதே அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.

“அதனால் இனிமேல் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுடன் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கை முடிவாகவே எடுத்துள்ளேன்,” என்று கூறியுள்ளார் வின்சி.

இதற்கிடையே, ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் வின்சி புகார் அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.