இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியிருக்கலாம்..?

புதிய கடை நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் பாதாள உலகத் தலைவன் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட திட்டத்தின் இலங்கையின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி எனும் பெண் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் அவரைத் தேடும் பொலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இதுவரை அவர் தொடர்பில் எந்தவொரு தடயமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்போது அவர் தொடர்பிலான தகவல்கள் இந்திய புலனாய்வுப் பிரிவினருடன் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. அவர் கடல் மார்க்கமாகவோ அல்லது இந்தியாவிற்கோ தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளமையே இதற்குக் காரணம்.
எவ்வாறாயினும், அவரை கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.