இந்தியாவுக்குப் பரிசு: ஜப்பானின் இரு புல்லட் ரயில்கள்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு உதவும் வகையில், ஜப்பான் தனது புகழ்பெற்ற ஷின்கான்சென் ரகத்தைச் சேர்ந்த இரண்டு புல்லட் ரயில் பெட்டிகளை இந்தியாவுக்குப் பரிசாக வழங்கவுள்ளது. மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் சோதனை மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு இவை பயன்படுத்தப்படவுள்ளன.
2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பான் இந்த ரயில் பெட்டிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புல்லட் ரயில் மூலம் 500 கி.மீ தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்க முடியும். ஜப்பானின் இந்த உதவி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கும் ஊக்கமளிக்கும் என நம்பப்படுகிறது.