போப் மறைவு: அனுதாபம் தெரிவித்து பின் நீக்கிய இஸ்ரேல்.

போப் ஃபிரான்சிஸ் மறைவுக்கு இஸ்ரேல் அரசு முதலில் அனுதாபம் தெரிவித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டது. எனினும், காஸா போர் குறித்த போப்பின் கருத்துகளால் அப்பதிவு பின்னர் நீக்கப்பட்டது.
போப் ஃபிரான்சிஸ் ஏப்ரல் 21 அன்று 88 வயதில் காலமானார். காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் இனப்படுகொலைக்கு இணையானது என அவர் 2024 நவம்பரில் கருத்து தெரிவித்திருந்தார். இது இஸ்ரேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
போப் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.