பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் நாமல் இரங்கல்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இதன்போது இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகைக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் உரையாடல் இடம்பெற்றது.
“கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்கு விஜயம் செய்து மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு எனது இரங்கலைத் தெரிவித்ததில் நான் பெருமை கொள்கின்றேன். மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இரக்கம், பணிவு மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியன உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஆழமாகப் பாதித்தன.” – என்று நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.