டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் விபத்து: 6 துப்புரவு பணியாளர்கள் பலி

டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் நேற்று காலை வேகமாக சென்ற சரக்கு வேன் மோதியதில் துப்புரவு பெண் தொழிலாளிகள் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.

டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் நூ ஹரியானா என்ற இடத்தில் பிரோஷ்பூர் ஜிர்கா பகுதி அருகே சரக்கு வேன் ஒன்று நேற்று காலை 10 மணியளவில் அதிவேகமாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்த வேன் விரைவுச்சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், மற்ற 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மாண்டி கேரா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை ஆய்வாளர் அமன்சிங் கூறுகையில், ‘‘ கோர விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் தப்பிச் சென்றுவிட்டார். விபத்துக்கான கரணத்தை அறிய சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம். விசாரணை முடிந்து வேன் டிரைவர் அடையாளம் காணப்பட்டதும் வழக்கு பதிவு செய்யப்படும்’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.