மாமனிதர் தராகி சிவராமின் 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் ஊடக அமையம், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – பிரதான வீதியில் அமைந்துள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியில் தராகி சிவராமின் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் ஆகியோரின் உருவப் படத்துக்குச் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி நினைவுகூரப்பட்டது.