முன்னாள் அமைச்சர்கள் மூவர் விரைவில் கைது?

இலங்கையில் முன்னைய அரசுகளின் காலங்களில் அமைச்சர்களாகப் பதவி வகித்த மூன்று அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது.
இவர்கள் மூவரும் சட்டவிரோத வாகனப் பயன்பாட்டுக் குற்றச்சாட்டின் கீழேயே கைது செய்யப்படவுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் மூவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், மீண்டும் இவ்வாறான குற்றச்சாட்டின் கீழ் எதிர்வரும் நாட்களில் மேலும் மூன்று முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது.
முக்கிய முன்னாள் அமைச்சர் ஒருவரும் இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.