பேஸ்புக் விளம்பரங்களுக்கும் வாட் வரி! ஒக்டோபர் முதல் புதிய சட்டம்!

இலங்கை, ஒக்டோபர் 1 முதல் இலங்கையர்கள் அல்லாதோரால் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிக்க தயாராக உள்ளது.
2025 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வாட் (திருத்த) சட்டத்தின் மூலம் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் இணங்குவதற்கான நடைமுறைகள் உரிய நேரத்தில் ஆணையாளர் நாயகத்தால் குறிப்பிடப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இருப்பினும், வெளிநாட்டு சேவைகளுக்கு வரி விதிப்பது மிகவும் சிக்கலானதுடன், கூகிள் மற்றும் மெட்டா போன்ற குடியுரிமை இல்லாத டிஜிட்டல் சேவை வழங்குநர்கள் வழங்கும் சேவைகளுக்கு வாட் வரி விதிக்கப்படும். இந்த நிறுவனங்களில் சிலவற்றிற்கு உள்ளூர் பிரதிநிதிகள் அல்லது அலுவலகங்கள் இல்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கட்டணம் செலுத்தும் போது பேமெண்ட் கேட்வே மூலம் வாட் வரி அறவிடப்படலாம். அதனை நுகர்வோர் ஏற்க வேண்டியிருக்கும்.
இதற்கிடையில், பல குடியுரிமை இல்லாத சேவை வழங்குநர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியபோதும், வழங்குநர் உள்நாட்டில் பதிவு செய்யப்படாவிட்டால், நுகர்வோர் நேரடியாக வாட் வரியை செலுத்த வேண்டியிருக்கும்.