நுவரெலியாவில் கடும் மழை; பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

நுவரெலியா நகர எல்லைக்கு (28) இன்று மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக நுவரெலியா நகரசபை விளையாட்டு மைதானம் மற்றும் நகருக்குள் நுழையும் பிரதான வீதி மழை வெள்ளத்தில் மூழ்கியது.
நீர் செல்லும் கால்வாய்கள் அடைபட்டதால் மழை நீர் பிரதான வீதி வழியாக வழிந்தோடியதன் விளைவாக, நுவரெலியா நகருக்கு முக்கிய நுழைவாயிலான நுவரெலியா தர்மபாலா சுற்றுவட்டார வீதி முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியதால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.