“இன்னும் ஒரு பட்டியல் வெளியாகும்” – நளின்த தெரிவிப்பு.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் தொடர்பில் விசேட வெளிப்படுத்தல் ஒன்றை தான் செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வீடுகளுக்கான நஷ்டஈடு பெற்றுக்கொள்வதில் இடம்பெற்ற விடயங்களை இதன் மூலம் தான் வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
அடுத்த சில நாட்களில் இந்த வெளிப்படுத்தல்களை தான் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.