டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா!

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்ச்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 204 ஓட்டங்களை எடுத்தது. ரகுவன்ஷி 44 ஓட்டமும், ரிங்கு சிங் 36 ஓட்டமும், சுனில் நரைன் 27 ஓட்டமும் எடுத்தனர். டெல்லி அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், அக்சர் படேல், விப்ரஜ் நிகாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டூ பிளசிஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 62 ஓட்டத்தை பெற்று அவுட்டானார். அணித்தலைவர் அக்சர் படேல் 43 ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் விபராஜ் நிகம் போராடி 19 பந்தில் 38 ஓட்டங்களை எடுத்தார். இறுதியில்,
டெல்லி அணி 20 ஓவரில் 190 ஓட்டங்களை எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

கொல்கத்தா அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும். டெல்லி அணிக்கு கிடைத்த 4வது தோல்வி இதுவாகும். கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.