கல்முனை சுகாதார சேவைகள் பிரிவில் பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 567 குடும்பங்களைச் சேர்ந்த 1819 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ். சுகுணன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இறக்காமம் பகுதியில் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட ஒரு கொரோனா தொற்றாளருடன், அந்த பகுதியில் இதுவரை 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இதுவரை 545 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|