வர்த்த நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.
கொரோனா அச்சநிலைமை காரணமாக ஹேவாஹெட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 112 வர்த்த நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வர்த்தக நிலைய பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் பேலியகொடை மீன்சந்தை கொத்தணியுடன் தொடர்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி வர்த்தக நிலையத்தின் அனைவரும் தங்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.