முஸ்லிம் கல்லூரி ஒன்றில் ஆண் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளாமை பெற்றோர்கள் கடும் சிரமம்.
அக்குறணைப் பிரதேசத்தில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டளவில் முதலாம் தரத்திற்காக அக்குறணை முஸ்லிம் பாலிகா கல்லூரியின் சுற்று வட்டாரத்திலுள்ள ஆண் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள முடியாமை பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் பிள்ளைகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்~வுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வைப் பெற்றுத் தரவுள்ளதாக என்று பிரதமர் மஹிந்த ராஜபக்~வின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளும் விடயத்தில் அக்குறணை முஸ்லிம் பாலிகா கல்லூரியின் சுற்று வட்டாரத்திலுள்ள ஆண் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள முடியாமை சிரமங்களை எதிர்நோக்கும் பெற்றோர்களின் கூட்டம் அக்குறணை ஐடெக் தனியார் கல்வி நிலையத்தில் இடம்பெற்றது. இப்பெற்றோர் சங்கத்தின் செயலாளர் ஐ. ஐனுடீன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்~வின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
ஒவ்வொரு வருடமும் அக்குறணை முஸ்லிம் பாலிகா கல்லூரியின் சுற்று வட்டாரத்திலுள்ள பிள்ளைகள் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளும் விடயத்தில் உண்மையிலேயே இப்பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். கடந்த காலங்களில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களை பொது போக்குவரத்து வசதியின்மையாலும் குறித்த பாடசாலைக்கு செல்வதற்கு அதிகம் செலவு செய்தல் வேண்டி ஏற்படுவதாலும் பாதைகள் உடைந்து போக்குவரத்துச் சீரின்மையாலும் சிறு பிள்ளைகள் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாலும் பாடசாலைக் கல்வியை தொடர முடியாமல் வறிய ஆண் மாணவர்கள் இடை நடுவில் கைவிட வேண்டிய சூழல் இப்பிரதேசத்தில் நிலவுகிறது இது உண்மையிலேயே கவலை தரும் செய்தியாகும்.
அக்குறணை ஜம்மிய்யதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி மர்சூக், அக்குறணை பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளர் வஹாப் மாஸ்டர் முதலியவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்~விடம் வழங்குவதற்காக மகஜர் ஒன்றையும் பெற்றோர்கள் அப்துல் சாத்தாரிடம் கையளித்தனர். விசேடமாக கொரோனா தொற்றில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டி துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.