அமெரிக்காவில் அதிரடியாக நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரம்..
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்றாம் தேதி அமெரிக்காவில் நடைபெற்றது. மேலும் அமெரிக்காவில் இதுவரை நடந்த தேர்தல்களில், இந்த தேர்தலில் தான் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருக்கின்றது என கணக்கெடுப்புகள் கூறுகின்றன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலின் வெற்றிக்கான தகுதியை பெற்றுள்ளதாக ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஷ் ஆகியோர் கணிக்கப்பட்டுள்ளனர்.
ஏனெனில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஷ் ஆகியோரின் தேர்தல் சபை வாக்குகள் இப்போது வரை 290 ஓட்டுகள் பெற்று முன்னணியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், அதிபர் பதவிக்கு தகுதியான 270 என்ற எண்ணை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஜோ பைடனுக்கும் கமலா ஹரிஷுக்கும் உலக நாடுகளின் பல தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல் வாழ்த்தாக ஜோ பைடனுக்கும் கமலா ஹரிஷுக்கும் அமெரிக்க முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா தனது வாழ்கை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இவர்களை தவிர பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபரான எம்மனுவேல் மாக்ரோங் மற்றும் பிரதமரான போரிஸ் ஜான்சன் ஆகியோர் தங்களது வாழ்த்துச் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு பல நாடுகளில் இருந்தும், அமெரிக்க மக்களிடமிருந்தும் ஜோ பைடனுக்கும் கமலா ஹரிஷுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.