கொரோனா வைரஸ்: 90 சதவீத அளவு பாதுகாப்பு அளிக்கும் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ்: 90 சதவீத அளவு பாதுகாப்பு அளிக்கும் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு
BBC
முதல்முறையாகப் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிட்டதட்ட 90 சதவீத பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த தடுப்பு மருந்தை உருவாக்கிய பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் “இது அறிவியலுக்கும், மனிதக் குலத்திற்கும் சிறப்பான ஒரு தினம்,” எனத் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து எந்த பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை.
இந்த மாத தொடக்கத்தில், இந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அவசர ஒப்புதலை வழங்கும் அனுமதிக்கு இந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
தடுப்பு மருந்து மற்றும் தேவையான நல்ல சிகிச்சை – இதுதான் இந்த கொரோனா தொற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் வழி.
BBC