யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்தவருக்கு கொரணா தொற்று உறுதி.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி நபர் கடந்த 26 ஆம் திகதி பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றதன் காரணமாக 28ஆம் திகதி மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டடவர். அங்கே செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வீட்டிற்கு வந்தவர். கடந்த 14 நாட்களாக வீட்டில் தனிமையில் இருந்தவர் இன்று பரிசோதனையில் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டதன் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக மருதங்கேணி Covid-19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 157 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.