செட்டிகுளம் மெனிக்பாம் பகுதிக்கான வீதி ஆரம்ப நிகழ்வு.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப் படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தினூடாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் வேண்டுகோளின் பிரகாரம் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதிக்கான 1.9Km பிரதான காபெட் வீதி அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு உத்தியோகப்பூர்வமாக பாராளுமன்ற உறுப்பினரினால் (15.11.2020)ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன் பிற்பாடு செட்டிகுளம் மெனிக்பாம் பகுதி மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும், அம்மக்கள் விடுத்த வேண்டுகோள்களையும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.