இலங்கையில் கொரோனா தொற்றால் இன்று மேலும் ஐவர் உயிரிழப்பு (update)

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு-13 ஐச் சேர்ந்த 54 வயதுடைய ஆண்,

கொழும்பு-15ஐ சேர்ந்த 39 வயதுடைய ஆண்,

கொழும்பு-12ஐச் சேர்ந்த 88 வயதுடைய ஆண்,

கொழும்பு-08ஐச் சேர்ந்த 79 வயதுடைய ஆண்

கொழும்பு-13 ஐச் சேர்ந்த 88 வயதுடைய ஆண் என ஐவர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த ஐவரும் கொரோனா தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணம் 58 ஆக அதிகரித்துள்ளது.

54ஆவது மரணம்
கொழும்பு-13, ஜிந்துப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 54 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதோடு, அவரது மரணத்திற்கான காரணம், நீண்ட கால புற்றுநோய் மற்றும் கொவிட்-19  தொற்று உக்கிரமடைந்தமை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

55ஆவது மரணம்
கொழும்பு-15 (மட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதான ஆண் ஒருவர், கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம், புற்றுநோய் மற்றும் கொவிட்-19  தொற்று காரணமான நியூமோனியா நிலை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

56ஆவது மரணம்
கொழும்பு-12 (வாழைத்தோட்டம்) பிரதேசத்தைச் சேர்ந்த, 88 வயதான ஆண் ஒருவர், நெஞ்சு வலி காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதோடு, அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்று காரணமான மாரடைப்பு என, அறிவிக்கப்பட்டுள்ளது.

57ஆவது மரணம்
கொழும்பு-08, பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த, 79 வயதான ஆண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளதோடு, அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்று காரணமாக நாட்பட்ட நுரையீரல் நோய் உக்கிரமடைந்தமை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

58ஆவது மரணம்
கொழும்பு-13 (கொட்டாஞ்சேனை/ கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 88 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதோடு, அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்று மற்றும் மாரடைப்பு என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.