போகம்பறை சிறை கைதிகள் தப்பியோட முயற்சி : ஒருவர் சுட்டுக்கொலை
போகம்பறை சிறையில் இருந்து தப்பிச் செல்வதற்கு முற்பட்ட கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போகம்பறை சிறைச்சாலையில் இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. ஐந்து கைதிகள் தப்பிச் செல்ல முற்பட்ட போதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். ஐந்து பேர் தப்பிச் செல்ல முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் மீது பாதுகாப்புத் தரபபினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் பலியானார். மூவர் கைது செய்யப்பட மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
பிந்திய செய்தி:
தப்பிச் சென்ற கைதி கைதாகியுள்ளார்
https://www.facebook.com/watch/live/?v=1068199140300989&ref=watch_permalink