முல்லைத்தீவு மாவட்ட செயலக நிதி மீளாய்வுக் கூட்டம்.
முல்லைத்தீவு மாவட்ட செயலக நிதி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக நிதி முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் நிதி மீளாய்வுக் கூட்டம் இன்று(19) வியாழக்கிழமைக காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை வினைத்திறனுடன் சிறந்த முறையில் முன்கொண்டு செல்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செலவுத் தலைப்புக்களின் நிதியினூடாக மேற்கொள்ளப்பட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக பிரதம கணக்காளர் அவர்களால் தெளிவூட்டப்பட்டது.
இதன்போது அமைச்சு, திணைக்களங்களில் நிதியினை எவ்வாறு கையாள்வது மற்றும் அதனை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.
உத்தியோகத்தர்களின் பயணக் கொடுப்பனவுகளின் வவுச்சர்கள் உரிய காலத்தினுள் ஒப்படைக்காமையால் ஏற்படுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
மேலதிக நேர கொடுப்பனவுகளை வரையறைப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது. குறிப்பாக கடமையின் நிமிர்த்தம் பொறுப்பான அதிகாரி கடமையில் ஈடுபட்டிருந்த போது உத்தியோகத்தர்கள் மேலதிக நேரங்களில் கடமைகளில் ஈடுபட அனுமதிக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதான கணக்காய்வாளர், பிரதான கணக்காய்வு அத்தியட்சகர், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பிரிவுகளின் உதவிப் பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் நிதி முன்னேற்றம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.