ஈ.பி.ஆர்.எல்.எப். – சு.க. கூட்டாட்சியிலுள்ள வவுனியா நகர சபை பட்ஜட்டும் வென்றது.
ஈ.பி.ஆர்.எல்.எப். – சு.க. கூட்டாட்சியிலுள்ள வவுனியா நகர சபை பட்ஜட்டும் வென்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டில் உள்ள வவுனியா நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா நகர சபை அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று காலை கூடியது.
இதன்போது தவிசாளரால் சபையில் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
இதனை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லரீப் அவர்கள் முன்மொழிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஜக்கரியாஸ் சலின்டன் வழிமொழிந்தார்.
இதையடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் உறுப்பினர் பி.யானுஜன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் பாஸ்கரன் ஜெயவதனி ஆகியோர் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றிய பின்னரே சபைக்கு சமுகமளித்திருந்தனர்.
வவுனியா நகர சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியைச் சேர்ந்த இ.கௌதமன் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சு.குமாரசாமி உப தவிசாளராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.