மின்சார நிலைய வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்.
திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்சார நிலைய வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கர வண்டி சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் மின்சார நிலைய வீதியால் சென்று கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியில் மரம் முறிந்த நிலையில் முச்சக்கர வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சாரதிக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது விபத்து சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் இன்று (22) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் திருகோணமலை அரசடி சந்தி சேர்ந்த சுரேஷ் (44வயது) என்பவர் ஆவார்.
மேலும் முறிந்த மரத்தை அகற்றும் பணியில் பொலிசார், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.