கண்டி நகர எல்லையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஒரு வாரம் மூடப்படும்
கொரோனா தொற்றுநோய் பரவும் அபாயம் காரணமாக கண்டியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (26) முதல் எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (25) கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, கண்டி, மஹியாவ மற்றும் அக்குரணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதற்கமைய, கண்டி நகரிற்குட்பட்ட சுமார் 45 பாடசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹியாவ மற்றும் அக்குரணை பிரதேசங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் நேற்று (24) முதல் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.