நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சமன்தாரா

வருடாவருடம் பல்வேறு நிறுவனங்கள் டாப் நடிகைகளின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம்.  தற்போது 2020ஆம் ஆண்டிற்கான டாப் 10 நடிகைகள் நடிகர்களின் பட்டியலை இந்த ஆண்டு முடியப் போவதால் பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மும்பையைச் சார்ந்த நிறுவனமான ஆர் மேக்ஸ் அக்டோபர் மாத தர வரிசையின் படி பிரபலமான நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

nayanthara

மேலும் அந்த லிஸ்டில் நயன்தாராவை ஒரு முன்னணி நடிகை தட்டி தூக்கியிருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அதாவது சில ஆண்டுகளாகவே பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக நயன்தாரா இருந்து வருகிறார். எனவே கோலிவுட்டை பொறுத்தவரை இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா தான்.

ஆனால் தெலுங்கு சினிமாவில் சமந்தா நயன்தாராவை முந்திவிட்டாராம். ஏனெனில் சமந்தா, நாக சைதன்யாவை கல்யாணம் செய்ததற்குப் பிறகு அவருடைய மவுசு டபுள் மடங்காக கூடிவிட்டதாம்.

என்னதான் நயன்தாரா தமிழில் டாப் என்றாலும் தெலுங்கில் அவர் 10-வது இடமாம். இதற்கு தான் ‘சிங்கம் குகையில இருக்க வரைக்கும் தான் அதுக்கு மவுசு’ அப்படிங்கிறதுக்கு அர்த்தம் போல.

 

 

Leave A Reply

Your email address will not be published.