இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 51 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஒருநாள் போட்டியிலும் ஏமாற்றிய இந்திய அணி 51 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலிய அணி 2-0 என, தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.

இரண்டாவது போட்டி சிட்னியில் நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு ஹென்ரிக்ஸ் தேர்வானார். இந்திய ‛லெவன்’ அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச் (60), டேவிட் வார்னர் (83) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தார்கள்.

அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் (104) சதம் கடந்தார். அடுத்த வந்த லபுசேன் (70), மேக்ஸ்வெல் தங்கள் பங்கிற்கு அரைசதம் கடந்து கைகொடுத்தனர்.ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 389 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் (63*), ஹென்ரிக்ஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஷமி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (30), மயங்க் அகர்வால் (28) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் (38) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கேப்டன் விராத் கோஹ்லி (89), லோகேஷ் ராகுல் (76) அரைசதம் கடந்தனர். ஹர்திக் பாண்ட்யா (28), ரவிந்திர ஜடேஜா (24) சோபிக்கவில்லை. ஷமி (1), பும்ரா (0) ஏமாற்றினர்.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 338 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சைனி (10), சகால் (4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3, ஹேசல்வுட், ஜாம்பா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.மூன்றாவது போட்டி வரும் டிச. 2ல் கான்பெராவில் நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.