யாழ். போதனா வைத்தியசாலை விடுதிகளுக்குள்ளும் வெள்ளம்!
யாழ். போதனா வைத்தியசாலை விடுதிகளுக்குள்ளும் வெள்ளம்!
யாழ். நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்கள் அடைமழையால் வெள்ளத்தில் மூழ்கின.
சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் அந்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுத்து இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.