இந்தியா நேபாளம் இடையில் விமானங்களை இயக்க நடவடிக்கை.
ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியா நேபாளம் இடையில் விமானங்களை இயக்க இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
‘வந்தே பாரத்’ திட்டத்திகீழ் கடந்த மே மாதம் முதல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானங்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.
ஜூலை முதல் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியா – நேபாளத்திற்கு இடையில் மீண்டும் விமான சேவையை துவங்க இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியா நேபாளத்திற்கு இடையே ஒப்பந்தம் அடிப்படையில் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டில்லி காத்மாண்டு இடையே ஒரு நாளுக்கு ஒரு விமானம் இயக்கப்படும். சுற்றுலா விசா இல்லாமல் முறையான இந்திய விசா வைத்திருப்போர் இந்த விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.