பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக இனி இவரா?
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகமுக்கியமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். குறிப்பாக இந்த சீரியலில் வரும் கதிர்- முல்லை ஜோடியை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
மேலும் இந்த சீரியல் மூலமாக தான் VJ சித்ரா தமிழக மக்கள் மத்தியில் நல்லதொரு நடிகையாக அங்கீகரிக்கப்பட்டார். இவ்வாறிருக்க, திடீரென சித்ரா தற்கொலை செய்து கொண்டு விட்டார். இது தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ராவுக்கு பதிலாக முன்னணி சீரியல் நடிகையான காயத்ரி நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் நிலைமையை எண்ணி சீரியல் நிர்வாகமும், விஜய்டிவி நிறுவனமும் இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏனென்றால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் விஜய் டிவியின் டிஆர்பிக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மேலும் காயத்ரி இதே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் காயத்ரி.