செயலிழந்த Google சேவைகள் , மீண்டும் வழமைக்கு திரும்பியது
உலகெங்குமிருந்து பல கூகிள் சேவைகள் செயலிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன
ஜிமெயில், கூகிள் தேடுபொறி, யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் சேவைகளும் குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கிடைத்த வெளிநாட்டு ஊடக அறிக்கையின்படி, இந்த முறையில் சேதமடைந்த கூகிள் சேவைகள் மீட்டமைக்கப்பட்டு வழமைக்கு திரும்பியள்ளதாக தெரியவருகிறது.
கூகுள் சேவை முழுமையாக முடங்கியதால் மாலை வேளையில் மாணவ சமூகம் அவதிப்பட்டனர். மிகவும் அரிதாக இப்படி நடப்பதால், கூகுள் நிறுவன சேவைக்கு என்ன ஆனது என்பதை அறிய பலரும் இணைய பக்கங்களில் விவரங்களை தேடினார்கள்.
இதற்கிடையே, யூட்யூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களில் பலரும் யூட்யூப் சேவையை அணுக முடியாமல் பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்களுடைய குழு அது குறித்து கவனித்து வருகிறது. விரைவில் என்ன நடந்தது என்ற தகவலை தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளது.
இந்த நிலையில், சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு கூகுள் நிறுவனத்தின் சேவைகள் ஒவ்வொன்றாக இயங்கத்தொடங்கின.