விமல் வீரவங்சவின் பிரதமராகும் கனவு
ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை விட தனக்கு இரட்டிப்பு விருப்பு வாக்குகள் கிடைக்க வேண்டும் எனும் பேரவாவில் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவங்ச கடந்த 24ம் திகதி நடந்த கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார்..
தன்னால் அதை தனித்து செய்ய முடியாது என்றும் அதை செய்வது மக்களின் கடமை என்றும் அவர் கூறினார்.
24 ஆம் தேதி நடைபெற்ற பொது பேரணியில் உரையாற்றிய விமல் வீரவங்ச இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பிறகு விமல் வீரவங்ச ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் தலைமைத்துவத்தை பெற்று பிரதமராகும் கனவில் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பது என்பது அரசியல் உலகில் ரகசியமல்ல. இந்த ஆண்டு தேர்தலுக்கும், “மனசாட்சியின் சமூக ஒப்பந்தம்” என ஒரு தனி கொள்கை அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள நிதி அமைச்சகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளை இடைவிடாமல் விமர்சிக்கும் செயல்முறையையும் விமல் வீரவங்சவே தொடங்கினார். அதற்கு அடுத்த வாரம்தான் ஜனாதிபதி பகிரங்கமாக அதிகாரிகளை கண்டித்தார்.
Comments are closed.