கொச்சி : மாடி வழி தப்பிக்க முயன்று இறந்த பெண்ணை சித்திரவதை செய்தனர் என உறவினர்கள் புகார்
அடுக்கு மாடிக்கட்டிட உரிமையாளர் தன்னை அச்சுறுத்தியதாகவும், தாக்கல் செய்த புகாரை கைவிட பணம் கொடுத்ததாகவும் கேளரளாவின் கொச்சினிலுள்ள மாடி வீட்டிலிருந்து தப்பிக்க முயன்று இறந்த பெண்ணின் கணவர், அடுக்குமாடிக்கட்டிட உரிமையாளர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜகுமாரி(55 வயது). கொச்சியில் மரைன் டிரைவ் அருகே உள்ள லிங்க் ஹொரைஸனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரும் நகரத்தின் முன்னணி வழக்கறிஞருமான இம்தியாஸ் வீட்டில் வீட்டு வேலைபார்த்து வந்துள்ளார். கணவருக்கு உடல் நலக்குறைவு என அறிந்து தமிழகம் வந்து ஒரு வாரம் முன் திரும்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு வேலை பிடிக்காததால் திரும்பி தமிழகத்திலுள்ள குடும்பத்தாரிடம் செல்ல அனுமதி கேட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் அவரை ஒரு அறைக்குள் பூட்டி வைத்திருந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது நிலை பால்கனியில் இருந்து டிசம்பர் 5 ஆம் தேதி அன்று தனது இரண்டு சேலைகளைப் பயன்படுத்தி அந்த பெண் தப்பிக்க முயன்றுள்ளார். தப்பிப்பதற்கான முயற்சியில், தனது பிடியை இழந்து கீழே விழுந்த ராஜகுமாரி,மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்குப் பிறகு உயிரை இழந்து விட்டார்.
குமரி வெளி மாநிலத்தில் வேலை செய்து தனது ஏழ்மையான மகள்கள் மற்றும் கண் பார்வையற்ற கணவன் அடங்கிய குடும்பத்தை அவர் காப்பாற்றி வந்துள்ளார்.
“வேலையில் சேர்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, குமாரிக்கு தொடர்ந்து அங்கு வேலை செய்ய பிடிக்கவில்லை என்றும் , வேலை மிகவும் கடினமாக உள்ளது என்றும் ,அவர்கள் தன்னை சித்திரவதை செய்கிறார்கள் என்றும் அவர் கணவனிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்ட குடும்பத்தினர் குமாரியை திரும்பி வரச் சொல்லியுள்ளனர். ஆனால் வீட்டு உரிமையாளர்கள் அவரை அறையில் அடைத்து வைத்து வெளியேற அனுமதிக்கவில்லை என்று புஷ்பாவின் சகோதரர் சுந்தர் கூறியுள்ளார்.
குடும்பத்தினர் உடனடியாக கேரளாவுக்கு வந்து போலீசுக்கு புகார் அளிக்க தாமதித்தால் மரண வாக்கு மொழியை எடுக்க இயலவில்லை. கொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குமாரியின் கணவர் சீனிவாசன், வழக்கறிஞர் இம்தியாஸால் தான் அச்சுறுத்தப்பட்டதாகவும் , புகார் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், ஒரு ஆவணத்தில் தன் கட்டை விரலால் ஒரு கைநாட்டு வெற்று காகிதத்தில் வைக்கச் செய்ததாகவும் கூறியுள்ளார்.
கொச்சி காவல்துறையினர் 342 சட்டப்படி தவறான சிறைவாசத்திற்கான தண்டனை மற்றும் 370 -நபர்களைக் கடத்தல் 338 -உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதன் மூலமோ அல்லது மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கோ கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் கீழ் இம்தியாஸ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் .
வழக்கறிஞர் இம்தியாஸ், வீட்டுத் தொழிலாளர்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறை அல்ல. 2010 ஆம் ஆண்டில், இம்தியாஸ் மற்றும் அவரது மனைவி கமருன்னிசா ஆகியோர் 14 வயது சிறுமியை உடல் ரீதியாக தாக்கியதாகவும் அச் சிறுமிக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுத்தியதற்காகவும் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
திங்களன்று மரைன் டிரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை பார்வையிட்ட கேரள மகளிர் ஆணையத்தின் அதிகாரிகள், உண்மையை அறிய இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையில், பெண்ணின் பிரேத பரிசோதனை திங்கள்கிழமை எர்ணாகுளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக கேரளா காவல் நிலைய அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.
– ஜோ