ஜனாஸா எரிப்புக்கு எதிராகப் போராட்டம்.
ஜனாஸா எரிப்புக்கு எதிராகப் போராட்டம்.
கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை எரிக்காது அடக்கம் செய்யக் கோரி வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பூநகரி பிரதேச செயலகம் முன்பாகக் கவனயீர்ப்புப் பதாதை காட்சிப்படுத்தப்பட்டது.
உலக நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று இஸ்லாமிய மத முறைமைக்கு எதிராக ஜனாஸாக்களை எரிக்க வேண்டாம் எனவும், மத அனுஷ்டானங்களுக்கு ஏற்ற வகையில் அதனை அடக்கம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரினர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.