வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைக்கான விதைப்பைகள் பயனாளிகளிடம் வழங்கி வைப்பு.
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைக்கான விதைப்பைகள் பயனாளிகளிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கான வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கை செயற்றிட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட 340 பயனாளிகளுக்கான விதைப் பைக்கட்டுக்கள் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் இன்று(16) நண்பகல் 11.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இச் செயற்றிட்டத்தின் ஆரம்பமாக இன்று பத்து பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஏனையவர்களுக்கு கிராம சேவகர் பிரிவினூடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த செயற்றிட்டமானது உலக உணவுத் திட்டத்தின் ஆர்.5.என் (R.5N) செயற்றிட்டம் ஊடக மக்களின் போசனை மட்டத்தினை உயர்த்தி அதனூடாக, போசாக்கான உணவினை : பொருளாதாரத்தை அவர்களே மேம்படுத்தும் வகையில் வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இச் செயற்றிட்டத்தினூடாக புடோல், வெண்டி, முளைக்கீரை, பயிற்றை, பூசணி, சிறகவரை, மிளகாய், தக்காளி, கத்தரி ஆகிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைகள் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.