மருதனார்மடம் கொத்தணி: சண்டிலிப்பாயைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா!
யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தைக் கொத்தணியில் புதிதாக நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
தெற்கிலுள்ள ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளானவர்கள் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.