2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி முனைப்பில் உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி முனைப்பில் உள்ளது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து, 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ‛டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய பந்துவீச்சாளர் பும்ரா 4 விக்., வீழ்த்தினார். அடுத்ததாக பேட்டிங் செய்த இந்தியா 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ரகானே 112, ஜடேஜா 57 ரன்கள் எடுத்தனர். பின்னர் 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜோ பர்ன்ஸ் (4) ஏமாற்றினார்.
நிதானமாக ஆடிய லபுசேன் (28), அஷ்வின் ‛சுழலில்’ சிக்கினார். ஸ்மித் (8) இந்த முறையும் விரைவாக பெவிலியன் திரும்பினார். பொறுமை காத்த மாத்யூ வேட் (40), ஹெட் (17) அவுட்டாகினர். கேப்டன் பெய்ன் (1) நிலைக்கவில்லை. 3வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி, 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் இந்திய அணியைவிட 2 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கிரீன் (17), கம்மின்ஸ் (15) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 2 விக்., வீழ்த்தினார்.