அப்பா நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் : ரஜினிகாந்தின் மகள்கள்
ரஜினிகாந்த் தற்போது கட்சி தொடங்கவில்லை என்றும் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையால் அரசியல்வாதிகளும் ரசிகர்களும் ஏன் இந்த திடீர் மாற்றம் என பலரும் தனிப்பட்ட கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் தற்போது கட்சி தொடங்கவில்லை என்றும் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது மருத்துவர்கள் ரஜினிகாந்திற்கு 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். முதலில் நீங்கள் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கொரானா தொற்று ஏற்படக்கூடிய சூழலிருந்து விலகி இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்ட ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும், அப்பா தயவு செய்து நீங்கள் இப்போதைக்கு அரசியலில் ஈடுபட வேண்டாம் முதலில் உடல் நலம் தான் முக்கியம் என கூறியுள்ளனர்.
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே ரஜினிகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளது. இந்நிலையில் கொரானா தொற்றிக் கொண்டால் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க கூடும் என்பதால் ரஜினிகாந்தின் மகள்கள் இப்போதைக்கு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம், உடல்நலம் குணமடைவதற்கு முழுமையாக ஓய்வு பெறுங்கள் என கூறியுள்ளனர்.
இந்த அன்பு கட்டளையைக் கேட்ட ரஜினி, இன்று கட்சி ஆரம்பிக்கவில்லை என்ற அதிகாரபூர்வமாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துவிட்டார். இறுதியில் பாசம்தான் வென்றது.