ஐசிசி டெஸ்ட் தரவரிசை ரஹானே முன்னேற்றம். 2 வது இடத்தில் கோலி,ஸ்மித் பின்னடைவு.
870 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரநிலையில் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். அஜிங்கிய ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் அபார சதத்துக்குப் பிறகு 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் 129 ரன்களையும் 21 ரன்களையும் எடுத்ததால் அவர் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
870 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரநிலையில் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். அஜிங்கிய ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் அபார சதத்துக்குப் பிறகு 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய டெஸ்ட் தொடரில் 10 ரன்களை மட்டுமே எடுத்த ஸ்மித் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
விராட் கோலி 879 புள்ளிகளுஅன் 2ம் இடம் வகிக்கிறார். 4 வது இடத்தில் லபுஷேன் உள்ளார். தொடர்ந்து பாபர் ஆசாம் 5, ரஹானே 6, வார்னர் 7, ஸ்டோக்ஸ் 8, ரூட் 9, புஜாரா 10. என்று இடம் பெற்று உள்ளனர்.
டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் 906 புள்ளிகளுடன் பாட் கமின்ஸ் முதலிடம் வகிக்கிறார். பிராட் 845 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் நீல் வாக்னர் 833 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் டிம் சவுதி 4ம் இடத்திலும் ஸ்டார்க் 5ம் இடத்திலும், ரபாடா 6, அஸ்வின் 7, ஜோஷ் ஹேசில்வுட் 8, பும்ரா 9, ஆண்டர்சன் 10.-ம் இடங்களில் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் பென் ஸ்டோக்ஸ் முதலிடம் வகிக்கிறார். ஹோல்டர் 2, ஜடேஜா3, ஷாகிப் அல் ஹசன் 4, ஸ்டார்க் 5-ம் இடத்தில் இருக்க, அஸ்வின் 6ம் இடத்தில் உள்ளார்.