எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் நடராஜனுக்கு வாய்ப்பு தரலாம் என தகவல்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் விளையாட தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு தரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி பந்துவீச்சாளர் உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டது.
காயம் காரணமாக உமேஷ் யாதவ் இந்தியா திரும்புகிறார். எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் உமேஷ் யாதவ் விளையாட வாய்ப்பு இல்லாததால் நடராஜன் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.