4 ஆயிரத்தைத் தாண்டியது சிறைச்சாலை கொத்தணி.
4 ஆயிரத்தைத் தாண்டியது
சிறைச்சாலை கொத்தணி.
இலங்கையில் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சிறைச்சாலைகளில் நேற்றும் 67 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஆண் கைதிகள் என்று சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொற்றாளர்களுடன் சேர்த்து இதுவரை சிறைச்சாலைகளுக்குள் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து16 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 3 ஆயிரத்து 272 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.