நீர்கொழும்பு சிறைசாலையில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்.
நீர்கொழும்பு சிறைசாலையில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம் இன்று இலங்கையில் மேலும் 3 பேர் பலி 536 பேருக்கு தொற்று உறுதி.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.
01 – கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும்.
02 – இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும்.
03 – நீர்கொழும்பு சிறைச்சாலையின் 62 வயதுடைய ஆண் கைதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் 487 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்