ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டு – தேரருக்கு ஆயுள் தண்டனை
கொழும்பு மாளிகாவத்தை போதிராஜாராம விகாரையின் பிரதம தேரர் சங்கைக்குரிய ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில் மாளிகாவத்த ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, துப்பாக்கி உட்பட வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதனை அடுத்து குறித்த தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊவதென்ன சுமன தேரருடன் குறித்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த அவரது சீடரான சங்கைக்குரிய மாவெலதென்னே சுமேத தேரரை, அவருக்கு எதிராக அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்தும் நிரபராதியாக கருதி விடுதலை செய்யவும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவ்வழக்கு விசாரணைகளின்போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் தனது தீர்ப்பை நீதிபதி அறிவித்துள்ளார்.
Comments are closed.