நீதிமன்ற தீர்ப்பால் ரஞ்சனின் குடி உரிமை பறி போகாது : பீபீசீ சிங்கள சேவை

நாட்டின் பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஊழல் மிக்கவர்கள் என்று கூறியமைக்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ரஞ்சன் ராமநாயக்க, தனிமைப்படுத்தலுக்காக பல்லங்சேன எனும் பகுதியின் சிறார் பயிற்சி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிறை செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நீதிபதிகள் சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் முன் இராஜாங்க அமைச்சராகவிருந்த காலத்தில் ரஞ்சன் ராமநாயக்க பேசிய பேச்சு நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருந்தது என குற்றம் சாட்டி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான சுனில் பெரேரா அளித்த புகாரைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21, 2017 அன்று அப்போதைய இராஜாங்க அமைச்சரராகவிருந்த ரஞ்சன் ராமநாயக்க மீது அட்டர்னி ஜெனரல் வழக்கு பதிவு செய்திருந்தார்.

பெஞ்சின் தலைமை நீதிபதி சிசிர டி ஆப்ரூ, ஆகஸ்ட் 21, 2017 அன்று அலரி மாளிகையில் நடந்த ஊடக சந்திப்பின் போது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தொடர்பாக பேசிய பேச்சின் மூலம் அவர் நீதித்துறையை நிந்தனை செய்தார் என சந்தேகத்திற்கு இடமின்றி ஒப்புவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

தலைமை நீதிபதி இந்த பேச்சு உள் நோக்கத்துடன் தெரவிக்கப்பட்டதாகவும், விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறி செல்லும் பல சந்தர்ப்பங்களில் அவர் அளித்த வாக்குமூலங்களை மீண்டும் பேசி அவற்றை அவரே உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

‘நான் கஞ்சா விற்கவில்லை’

தீர்ப்பின் பின்னர் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது ஊடகங்களிடம் பேசிய எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க, “நான் கசப்பான உண்மையை பேசினேன், நான் திருடவில்லை. பிள்ளயானை இந்த அரசாங்கத்திலிருந்து விடுதலை செய்தார்கள். என்னை உள்ளே தள்ளினார்கள். இந்த போராட்டத்தை தொடர்வோம். இந்த ஊழல் நிறைந்த அரசாங்கத்திலிருந்து விடுபடுங்கள். நான் சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மை. அவை பொய் என வாபஸ் பெற மாட்டேன். அவர்கள் எல்லோரும் உண்மையில் திருடர்கள். என்னைப் போன்ற திருடாத ஒரு மனிதரை அவர்கள் ஒரு திருடன் என்று உள்ளே போடுகிறார்கள். எனக்கு கிடைத்த அனைத்தையும் மக்களுக்கு கொடுத்தேன். எனக்கு கிடைத்த சம்பளத்தைக் கூட மக்களுக்குத்தான் கொடுத்துள்ளேன். இவர்களை போல நான் திருடனில்லை. என்றதோடு

” நான்ஹெராயின் விற்கவும் இல்லை. திருடவும் இல்லை. பிள்ளையானை வெளியே விட்டது போலவே துமிந்த சில்வாவையும் வெளியில் விடுமாறு அரசாங்கத்திடம் சொல்கிறேன். போதைப்பொருள் விற்பனையாளர்களைப் பற்றி பேசியதற்காக அவர்கள் என்னை உள்ளே தள்ளுகிறார்கள். நான் எத்தனோல் கொண்டு வரவில்லை, அதைப் பற்றி பேசியதற்காக என்னை உள்ளே தள்ளுகிறார்கள். நான் தனித்தவன். சாவுக்கு பயந்தவனல்ல,” என ரஞ்சன் சிறையதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படும் போது பேசிக் கொண்டே சென்றார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் போது , பிள்ளையானை விடுதலை செய்வதற்கான முன்னெடுப்புகளாக அந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து அந்த வழக்கின் குற்றவாளிகளாக சந்தேகிப்பட்டோர் விடுதலையாகவுள்ளனர் (விடுதலை ஆகிவிட்டனர்) என வந்த செய்திகள் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வந்திருந்தன. அது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு நேற்று அறிவிக்கப்பட்டமை நகைப்புக்குரியது என பலராலும் பேசப்படுகிறது.

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு என்ன நடக்கும் என்பது குறித்து பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் பேசப்படுகின்றன மற்றும் சட்ட வல்லுநர்கள் ஒரு நபரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பது அவரது குடிமை உரிமைகளை இழப்பதன் காரணமாக மட்டுமே அமையலாம் எனக் கூறுகின்றனர். இது அரசியலமைப்பின் பிரிவு 89 (ஈ) இல் கூறப்பட்டுள்ளது.

கொலை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் ஒருவருக்கு நாடாளுமன்றம் வர சட்டத்தில் இடம் இருக்க முடியும் என்றால், ரஞ்சன் நாடாளுமன்றத்துக்கு வர ஏன் முடியாது என சொல்ல உள்ள சட்டம்தான் என்ன? என அநேகர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முறையீடு?

அதாவது, “ஒரு நபர் இரண்டு வருடங்களுக்கும் குறையாத காலத்திற்கு சிறைத்தண்டனை அனுபவித்து வந்தால், அல்லது ஏதாவதொரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின்னர் ஆறு மாதங்களுக்கும் குறையாத காலத்திற்கு சிறைத்தண்டனை அனுபவித்து வந்தால் அல்லது முழு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தால்.” அவர் ஏற்கனவே மரண தண்டனையை அனுபவித்திருந்தால், அல்லது அவர் அத்தகைய தண்டனையை அமுல்படுத்துவதற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு குறையாத காலத்திற்கு சிறைத்தண்டனை அனுபவித்து வந்தால், அல்லது கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் முழு தண்டனையையும் அனுபவித்திருந்தால், அவர் அல்லது அவள் ஜனாதிபதி தேர்தலில் அல்லது பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதியற்றவர் ஆகிறார்.

எவ்வாறாயினும், இந்த பத்தியின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எந்தவொரு நபருக்கும் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கப்பட்டால், அந்த மன்னிப்பு தேதியிலிருந்து அந்த தகுதி நீக்கம் நிறுத்தப்படும். ”

பிபிசி சிங்கள சேவையுடன் இது குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் திஷ்ய வேரகொட, “பாராளுமன்ற ஆசனத்தை இழக்க, இந்த இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் குற்றமாக தெரிகிறது. தாக்கல் செய்யப்பட்ட வழக்கைப் போலவே, இது மேல்முறையீட்டு நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டியது, மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றம் விளக்கமளிக்கும் அளவுக்கு தாராளமயமானதா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது. ” என்கிறார்.

“பொதுவாக உச்சநீதிமன்றத்தின் முடிவை மேல்முறையீடு செய்ய முடியாது. அதனால்தான் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஒரு சட்டத்தை இயற்றுமாறு அவ்வப்போது கோரிக்கைகள் வந்து கொண்டே இருந்தன.”

நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பு ரஞ்சன் ராமநாயக்க தனது முக புத்தகத்தில் வெளியிட்ட புகைப்படம்

‘பிரஜா உரிமைக இல்லாமல் போகாது’

இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை மற்றும் அதன் காலம் தீர்மானிக்கப்படாததால் அவரது குடி உரிமையை இழக்க சாத்தியமில்லை என வழக்கறிஞர் சுரேன் பெர்னாண்டோ கூறுகிறார்.

“அரசியலமைப்பின் 89 (ஈ) பிரிவின் 91 (1) (ஈ) பிரிவின் கீழ் நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் / 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் போது, ​​ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ரத்து செய்யப்படுவார் என்று சிலர் கருதுகின்றனர். “தகுதியற்றவர் என்பதால் எம்.பி. தனது இடத்தை இழக்க நேரிடும் என்று நான் கருதுகிறேன்” என்று வழக்கறிஞர் சுரேன் பெர்னாண்டோ கூறினார்.

“இருப்பினும், 89 வது பிரிவு வாக்காளர்களின் தகுதி நீக்கம் தொடர்பானது. அரசியலமைப்பின் பிரிவு 91 (1) (ஈ) தேர்தல் மற்றும் / அல்லது உறுப்பினர் தேடும் நபர்களின் தகுதிநீக்கங்களுக்கும் இது பொருந்தும்.”

நீதிமன்ற அவமதிப்பை அரசியலமைப்பு வரையறுக்கவில்லை என்று கூறும் வழக்கறிஞர் சுரேன் பெர்னாண்டோ, “இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றம்”.

“நீதிமன்றத்தை அவமதித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்க அரசியலமைப்பு சட்டமொன்று இதுவரை இல்லை. ஆகவே, ராமநாயக்க 89 (ஈ) பிரிவின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை, எனவே நாடாளுமன்ற உறுப்பினராக தொடர உரிமை இருக்க வேண்டும்” என்றும் சுரேன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.திசநாயக்க

இருப்பினும், இந்த தீர்ப்பால் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்று சில சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அதன்படி, ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அறிய நீதிமன்றங்களின் உதவியை நாடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

முன்னதாக, 2004 டிசம்பரில், முன்னாள் அமைச்சராகவிருந்த எஸ்.பி.திசாநாயக்க நீதிமன்ற அவமதிப்புக்காக இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை பெற்று அடைக்கப்பட்டார்.

நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசி சிங்கள சேவையிடம், எஸ்.பி.திசநாயக்க பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்காமை காரணமாகவே அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து எஸ்.பி.திசாநாயக்கவின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அவருக்கு சாதகமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்ப்பளித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இத் தீர்ப்பு தொடர்பாக கலாநிதி அசங்க வெலிகல ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்து பின்வருமாறு உள்ளது:

பிள்ளையானின் விடுதலை

இதற்கிடையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் தடுப்பு காவலில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விடுவிக்கப்பட்டார்.

பிள்ளயான் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து, ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு மட்டக்களப்பு உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த முடிவை விமர்சித்து முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ட்விட் பண்ணிய செய்தி :

கம்பஹா மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு , 4 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்ததன் காரணமாக அவரது நாடாளுமன்ற உரிமை ரத்து செய்யப்பட்டால் , கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஐக்கிய சக்தியிலிருந்து கம்பஹா மாவட்டத்துக்காக போட்டியிட்ட அஜித் மான்னபெருமவுக்கு, முன்னுரிமை பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பதால் அவருக்கு அப் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

அந்தத் தேர்தலில், கம்பஹா மாவட்டத்தில் விருப்பத்தேர்வு பட்டியலின் படி, மக்கள் ஐக்கிய சக்தி நான்கு இடங்களை வென்றது, ரஞ்சன் ராமநாயக்க அதிக எண்ணிக்கையிலான முன்னுரிமை வாக்குகளையும், அஜித் மான்னப்பெரும ஐந்தாவது இடத்தையும் பெற்றனர்.

மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தீர்ப்பை வழங்கியதால், இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு உள்ளது என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘புதிய சட்டங்கள் தேவை’

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், நீதிமன்ற அவமதிப்பு குறித்து சட்டமியற்ற வேண்டிய அவசியம் மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது.

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் பிபிசி சிங்கள சேவையிடம் “நீதிமன்றம் தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் பேச்சு சரியானதல்ல, ஆனால் அதற்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமில்லை. அவருக்கு எதிராக நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட கொள்கை சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனத்தின் தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது.” என்றார்.

கம்பஹா மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும, ரஞ்சனின் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை காரணமாக அவரது நாடாளுமன்றத் ஆசனம் ரத்து செய்யப்பட்டால் அந்த இடத்தை பெற வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா மாவட்டத்துக்காக போட்டியிட்ட அஜித் மான்னபெரும, முன்னுரிமை பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

“எஸ்.பி. திசாநாயக்க மற்றும் டோனி இமானுவேல் பெர்னாண்டோ ஆகியோருக்கு தண்டனை வழங்கப்பட்ட பிறகும், இந்த விவகாரத்தில் நீதித்துறையின் தன்னிச்சையான அதிகாரங்களை கட்டுப்படுத்த பாராளுமன்றம் பொருத்தமான சட்டங்களை இயற்றியிருக்க வேண்டும்.”

தலைமை நீதிபதி சரத் என் சில்வா மற்றும் நீதித்துறை சேவை ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்களுக்கு எதிராக டோனி பெர்னாண்டோ பிரதிவாதிகளான இருவரை நோக்கி ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தபோது, ​​தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகள் குழு மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் மேலும் தெரிவித்தார். அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இது சர்வதேச கவனத்தை ஈர்த்த ஒரு கொடூரமான சம்பவமாக பார்க்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்தது சட்டத்தின் படி ஒரு நியாயமான அல்லது சரியான தண்டனையாகக் கருத முடியாது. தற்போது தண்டிக்கப்படக் கூடாது என்ற அவமதிப்பு , நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் அல்லது சட்டத்திற்கு எதிரான முடிவு என்று கருதப்படுகிறது. ”

– பிபிசி சிங்கள சேவை

Leave A Reply

Your email address will not be published.