இந்தோனேஷியா ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தோனேஷியா ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேஷியாவின் சூலவெய் தீவகப் பகுதியின் மஜீனே நகரிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தினால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்குண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்தும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தோனேஷியாவின் சூலவெய பகுதியில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 2000திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.